கோவில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு?- சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
1 min read
What is wrong with using temple funds for education? – Supreme Court question
28.8.2025
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்தியதற்கு எதிராக ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது,
கோவில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் கபாலீஸ்வரர் கோவில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் தவறில்லை எனக்கூறி தமிழக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.