August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் எரிந்த நிலையில் கிடந்த மனித எலும்புக்கூடு

1 min read

A human skeleton found burnt in a paddy field

30.8.2025

நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இடுகாடு உள்ளது. அங்கு நேற்று மதியம் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக பலர் சென்றனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்குள்ள வெட்டவெளி பகுதியில் தென்னை மட்டைகளை மொத்தமாக வைத்து அதன் நடுவே ஒரு மனித உடல் ஒன்று தீயில் எரிந்து கொண்டு இருந்தது.

இதனையடுத்து அவர்கள் உடனடியாக மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொதுவாக ஒருவர் மரணம் அடைந்தால் உறவினர்கள் பல்வேறு சடங்குகளுக்கு பிறகு உடலை அடக்கம் அல்லது தகனம் செய்வார்கள். ஆனால் இந்த உடல் அவசர அவசரமாக தீ வைத்து எரிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் உடல் எலும்புக்கூடு கிடந்த இடத்தில் சில தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மர்மநபர்கள் யாரையாவது கொலை செய்து இங்கு வந்து எரித்தனரா? அது ஆணா, இல்லை பெண்ணா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *