August 29, 2026

Seithi Saral

Tamil News Channel

அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பூட்டான் பிரதமர்

1 min read

Bhutan Prime Minister visits Ayodhya Ram temple

5.9.2025
பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே, தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் அயோத்தி விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது. உத்தர பிரதேச மந்திரி உள்பட மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

இந்நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே நேற்று வருகை தந்தார். ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், அயோத்தியில் உள்ள பிற முக்கிய கோவில்களுக்கும் சென்று வழிபாடு செய்தார்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அலகாபாத் மற்றும் லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக ராமர் கோவிலை அடைந்த டோப்கே அயோத்தி ராமர் கோவில், அனுமன் கோவில் மற்றும் பிற முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *