கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவார் என்று எதிர்பார்க்கவில்லை- செங்கோட்டையன் பேட்டி
1 min read
I don’t expect him to remove me from party leadership – Sengottaiyan interview
6.9.2025
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் தனது பணி தொடரும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசினர். அ.தி.மு.க. தொண்டர்களின் உணர்வை தான் நான் வெளிப்படுத்தினேன்.
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து என்னை நீக்குவதற்கு முன்னதாக என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும்.
என்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சி பொறுப்பில் இருந்து என்னை நீக்கியுள்ளனர்.
காலில் விழுகிறோம் என கூறியவர்களையே ஏற்காமல் புறக்கணித்து விட்டனர்.
என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதால் பாதிப்பா என்றால் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
கட்சி நலன் மற்றும் ஆட்சி அமைப்பதற்காக தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தேன்.
ஒன்றிணைந்தால் சட்டமன்ற தேர்தலில் எளிதாக வெற்றி பெறலாம் என அ.தி.மு.க. தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் எண்ணத்தை யார் தான் வெளிப்படுத்துவது?
கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது முதல் அவரது ஆதரவாளர்கள் கோபிசெட்டிபாளையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.