தென்காசி பூ வியாபாரிக்கு கத்திக்குத்து
1 min read
Tenkasi flower vendor stabbed
6.9.2025
தென்காசியை சேர்ந்த பூ வியாபாரி அனீஸ் குமாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் அப்பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் ‘கட்டப்பா’ குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
தென்காசியை சேர்ந்த அனீஸ் குமார் என்பவர் நெடுமங்காடு பகுதியில் உள்ள ராஜனின் கடைக்கு தேவையான பூக்களை சப்ளை செய்து வருகிறார். ஓணம் பண்டிகை யை முன்னிட்டு இவரிடம் இருந்து ராஜன் அதிக அளவில் மளவு பூ வாங்கியிருந்தார்.
நேற்று பூ சப்ளை செய்ததற்கான பணத்தை வாங்குவதற்காக அனீஸ் குமார் ராஜனின் கடைக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கும், ராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் கடையில் இருந்த ‘கட்டப்பா’ குமார் திடீரென பூ கட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தியால் அனீஸ் குமாரின் நெஞ்சில் சரமாரியாக குத்தினார். இதன்பிறகு அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த அனீஸ் குமார் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையிலும், பின் னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவம் னையிலும் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நெடுமங்காடு போலீசார் பூக்கடை உரிமையாளர் ராஜனையும், தப்பி ஓடிய ‘கட்டப்பா’ குமாரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.