June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் வஉசி பிறந்தநாள்விழா

1 min read

Tenkasi: DMK, AIADMK organize VUC birthday celebration

6.9.2025
தென்காசி நகரத்தில் சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் 154 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி நகரக் திமுக செயலாளரும் நகர மன்ற தலைவருமான ஆர்.சாதிர் தலைமையில் வ.உ.சி திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நகர திமுக நிர்வாகிகள் அவை தலைவர் பாலகிருஷ்ணன் என்ற கிட்டு, நகர் திமுக துணை செயலாளர்கள் ராம்துரை, பால்ராஜ், பொருளாளர் அ.ஷேக்பரீத், நகர்மன்ற உறுப்பினர் ஜெயலட்சுமி சாமி
மாவட்டபொறியாளர் அணி தலைவர் சே.தங்கபாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் அருணாச்சலம், கல்யாணசுந்தரம் மாவட்ட திமுக சூற்றுசூழல் அணி இசக்கித்துரை, அறங்காவலர் முருகானந்தம், இளைஞரணி அருண், கவிதா மாரியப்பன், கல்வத்து, அஷ்ரப்அலி செய்யது சுலைமான், கஸ்வாபாய், கருத்த பாண்டியன், சங்கர்ராஜன், பழக்கடைகுமார், ரெசவுமைதீன்,
இசக்கி, பாலகிருஷ்ணன், மற்றும் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

அதிமுக சார்பில்

பாவூர்சத்திரம் மாவட்ட அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ உ சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் இலஞ்சி எஸ்.கே. சண்முகசுந்தரம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் வழக்கறிஞர் கார்த்திக்குமார், நெல்லை முகிலன், சுப்பாராஜ், அகமதுஷா, தமிழ் என்ற ராமசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் என் எச் எம் பாண்டியன், இருளப்பன், குணம் என்ற உத்திரகுண பாண்டியன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சேர்மபாண்டி, அருள்பாண்டி என்ற ஐவராஜா, திருமலை முருகன், ஒன்றிய துணை செயலாளர் சேர்மராஜா, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

பாஜக சார்பில்

தென்காசி காந்தி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப்படத்திற்கு பாஜக நிர்வாகிகள்மாலை அணிவித்தும், மலர்த் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில தென்காசி மாவட்ட பாஜக துணை தலைவர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் எம் எஸ் மந்திரமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராஜ குலசேகர பாண்டியன், மகளிர் அணி பொறுப்பாளர் குணசீலா, நகரத் தலைவர் சங்கர சுப்பிரமணியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் கருப்பசாமி, மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார் , சேது ராமலிங்கம், இளைஞர் அணி பொறுப்பாளர் முரளிதரன், நகர பாஜக பொதுச் செயலாளர்கள் லட்சுமண பெருமாள், மற்றும் பாலசுப்பிரமணியன் நகரத் துணைத் தலைவர் எல் எஸ் கருப்பசாமி, நகர செயலாளர் நாராயணன், வெங்கடேஷ், ,முன்னாள் நகர பொருளாளர் சேகர் முன்னாள் நகர செயலாளர் பாண்டுரங்கன், ராமானுஜம், ஆன்மீக பிரிவு நகர தலைவர் முத்துராஜ், கிளைத்தலைவர்கள் கணபதி, கோபி, இசக்கி ராஜன், உறுப்பினர் ரங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகர பாஜக தலைவர் நகர் மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *