June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் காவலர் தினவிழா – கண்காட்சி

1 min read

Police Day Celebrations in Courtallam – Exhibition

7.9.2025
குற்றாலத்தில் தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில் காவலர் தினத்தை முன்னிட்டு நடந்த ஆயுத கண்காட்சியை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பார்வையிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டா லின் ஆலோசனையின் பேரில் தமிழகம் முழுவ தும் காவலர் தின விழா, பரதநாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று குற்றாலம் கலைவாணர் அரங்கில் ஆயுத கண்காட்சி நடந்தது. மாவட்ட எஸ்பி அரவிந்த் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஓ.கே.கமல் கிஷோர் பங்கேற்று ஆயுத கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்தி ரன், சங்கரன்கோவில் நட ஆர்டிஓ கவிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த், மாவட்ட வன உதவி அலுவலர் நெல்லை நாயகம், குற்றாலம் வனச்ச ரக அலுவலர் செல்லத் துரை, குற்றாலம் பிரிவு வனவர் சங்கர்ராஜா, ஏடிஎஸ்பிக்கள் ஜூலியஸ் சீஸர், சங்கர், சுரேஷ் பீட் டர் பெலிக்ஸ், டிஎஸ்பிக் கள் தமிழினியன், மீனாட்சி நாதன் செங்குட்டுவேலன், தென்காசி மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சு.வேல்சாமி, மாரிக்குட்டி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து காவலர்க ளின் இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பரதநாட்டியம் நடனமாடிய குழந்தைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் நினைவு பரிசுகளை வழங்கினார்.

ஆயுத கண்காட்சியில் பல்வேறு விதமான அதிநவீன துப்பாக்கிகள், கூட் டத்தை கலைக்கக் கூடிய கண்ணீர் புகை குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான துப்பாக்கிகள் இடம் பெற்றிருந்தது. இந்த கண்காட் சியை ஏராளமான பார்வையிட்டனர்.

மேலும் பெண் காவலர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு துப்பாக்கிகளில் குண்டு களை வேகமாக நிரப்பு வதை செய்து காண்பித்தனர். மேலும் நிகழ்ச்சியில் சைபர் கிரைம். சார்பிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற் றங்கள் புலனாய்வு பிரிவு சார்பிலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *