June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி பள்ளி வளாகத்தில் ரேஷன்கடை- கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

1 min read

Christians protest against ration shop in Tenkasi school premises

7.9.2025
தென்காசி ஆர்.சி.பள்ளி விளையாட்டு மைதானத்தில் நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதையும், ஆர்.சி.சர்ச் முன்பாக தினசரி சந்தையின் வாயில் கேட் அமைப்பதையும் கண்டித்து கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

400 ஆண்டுகளுக்கும் மேலாக இறைவனின் அருள்பாலிக்கும் கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை தரும் புனித மிக்கேல் அதிதூதரின் ஆலயத்திற்கும் அங்கு நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆலயத்திற்கு எதிராக அமைந்திருக்கும் தினசரி சந்தையின் இரு நுழைவு வாயிலை அகற்றும்படியும், ஆர்.சி. பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் விளையாட்டு மைதானத்தில் ரேசன் கடையை கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும்படியும், தென்காசி நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையாளரின் முரண்பட்ட செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பந்தமாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு பண்டாரக்குளம் வட்டார அதிபர் எஸ் ஏ அந்தோணிசாமி அடிகளார் தலைமை தாங்கினார். மரிய லூயிஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். தென்காசி பங்கு தந்தை ஏ. ஜேம்ஸ் அடிகளார் அனைவரையும் வரவேற்று பேசினார். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தென் மண்டல அமைப்புச் செயலாளர் ரவி, பங்கு பேரவை சார்பில் ஜோதி காசி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சந்திரசேகர், ஆர் சி பள்ளி ஆசிரியர் அமலி செல்வராணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆலங்குளம் பங்கு தந்தை மை.பா.சேகராஜ், கோரிக்கைகளை விளக்கி கண்டன விளக்க உரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்
அருட்தந்தையர்கள் வல்லம் பங்கு தந்தை விசுவாச ஆரோக்கியராஜ், தென்காசி வட்டார அதிபர் எஸ்.ஏ. அந்தோணிசாமி, ஆர் சி சர்ச் குருக்கள் ஏ.ஜேம்ஸ், அருட்திரு அலாய்சியஸ் துரைராஜ்,ண புளியங்குடி பங்குத்தந்தை எட்வின், மறை மாவட்ட பொருளாளர் தீபக்,
மேல மெஞ்ஞானபுரம் பங்குத்தந்தை அல்போன்ஸ், சிதம்பராபுரம் பங்குத்தந்தை அந்தோணி ராஜ், வாடி ஊர் பங்குத்தந்தை லியோ ஜெரால்டு, சுரண்டை பங்குத்தந்தை ஜோசப் ராஜன்,
தென்காசி உதவி பங்கு தந்தை
ஜியோ சந்தனம் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அகரக்கட்டு பங்குத்தந்தை அலோய்சியஸ் துரைராஜ், அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *