June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் கந்துவட்டி கொடுமை: கொத்தனார் மீது தாக்குதல்

1 min read

Atrocities of interest-bearing in Courtallam: Attack on bricklayer

8.9.2025
போலீசார் தீவிர விசாரணை தென்காசி மாவட்டத்தில் மீண்டும் தலை தூக்கும் கந்து வட்டி பிரச்சனையால்ஸ குற்றாலம் அருகே ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி பகுதியை சேர்ந்தவர் இசக்கிதுரை (வயது 30) கொத்தனராக வேலை பார்த்து வரும் இவர் இதே பகுதியை சேர்ந்த ஜான்பீட்டர் (வயது 30) என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 25 – ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்த கடனுக்காக வட்டியும் முழுதலுமாக 50 – ஆயிரம் ரூபாய் கடனாக செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கடன் கொடுத்த ஜான்பீட்டர் மேலும் 30-ஆயிரம் ரூபாய் கூடுதல் வட்டி கேட்டு கடந்த ஆறு மாதமாக மிரட்டல் விடுத்து வந்தாகவும் கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த இசக்கிதுரையிடம் அங்கு வந்த ஜான்பீட்டர் மீண்டும் வட்டி கேட்டு தகராறு செய்த நிலையில் இசக்கிதுரையை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மயங்கி கீழே விழுந்த இசக்கிதுரை. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகுதியில் கந்து வட்டி பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் இதே கந்து வட்டி பிரச்சினை காரணமாக கந்து வட்டி கொடுக்கப் பட்டவரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் நிலையில், மீண்டும். தென்காசி மாவட்டத்தில் கந்து வட்டி பிரச்சனையால் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *