June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

எர்ணாகுளம் – தென்காசி வேளாங்கண்ணி சிறப்பு ரயில் நாளை இயக்கம்

1 min read

Ernakulam – Tenkasi Velankanni special train operation

9.9.2025
எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் நாளை இயக்கப்பட உள்ளது.

வேளாங்கண்ணி கோயில் திருவிழா முடிந்து பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி வழியாக வேளாங்கண்ணிக்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
எர்ணாகுளம் -வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (எண்.06061) நாளை 10ம்தேதி புதன்கிழமை எர்ணாகுளத்தில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் பிற்பகல் 3.15 மணிக்கு வேளாங்கண்ணியை சென்று அடைகிறது.

மறுமார்க்கமாக வேளாங் கண்ணி – எர்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்.06062) வேளாங்கண்ணியில் இருந்து வரும் 11ம் தேதி வியாழக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளத்தை சென்று அடைகிறது.

இந்த ரயிலானது எர்ணாகுளததில் இருந்து கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கானூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருநாகப்பள்ளி, கொல்லம், குண்டாரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜ பாளையம், சிவகாசி, விருதுநகர், அருப் புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டினம், திருத் துறைபூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை சென்றடைகிறது.

இந்த ரயிலில் ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டி, 3 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுதிறனாளி பெட்டி, ஒரு லக்கேஜ் பெட்டி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

எர்ணாகுளத்தில் இருந்து ஏற்கனவே தென்காசி வழியாக வேளாங்கண்ணிக்கு சனி, திங்கள் ஆகிய தினங்களில் வாரம் இருமுறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. றன. தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயிலையும் நிரந்தரமாக்கினால், நிரந்தர கேரள மற்றும் தென்மாவட்ட மக்களுக்கு வசதியாக இருக்கும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *