சுரண்டை அருகே கட்டிட தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
1 min read
Construction worker hacked to death near Surandai
9.9.2025
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே கட்டிட தொழிலாளி முன்விரோதம் காரணமாக கட்டிடத் தொழிலாளியை சரமாரியாக வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை இ.மீனாட் சிபுரம் பிள்ளையார் கோவில் | தெருவைச் சேர்ந்த பாண்டிநாடார் என்பவரது மகன் மாடக்கண்ணு (வயது 35) இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் ராமராஜ் (வயது 34), இவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராமராஜ் தனது குடும்பத்துடன் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று
இரவில் இ.மீனாட்சிபுரத்திற்கு ராமராஜ் வந்தார். அப்போது. மாடக்கண்ணு ஒருகடையின் திண்ணையில் இருந்து பேசிக் கொண்டு இருந்ததை பார்த் தார். அங்கு சென்ற ராமராஜ் திடீரென்று மாடக்கண்ணு
விடம் தகராறு செய்தார்.
இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராமராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாடக்கண்ணு வை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிளாட்சன் ஜோஸ், சுரண்டை இன்ஸ் பெக்டர் அரிகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு உயிருக்கு போராடிய நிலையில் இரேந்த மாடக்கண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் செல்லும் வழியிலேயே மாடக்கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராமராஜை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை வருகிறார்கள்.
சுரண்டை அருகே கட்டிட தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.