துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி
1 min read
Vice Presidential Election: C.P. Radhakrishnan wins
9.9.2025
நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து அந்தப் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. பிஜூ ஜனதா தளம், பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.
துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.