June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

சுந்தரபாண்டியபுரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிர்வாகி போக்சோவில் கைது

1 min read

Sexual harassment of 8th grade student in Sundarapandiyapuram: School administrator arrested under POCSO

13.9.2025
தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் சிமியோன். கிறிஸ்தவ பாதிரியாரான இவர் அப்பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இவருடைய மகன் லிவி (28 வயது). இவர் தனது தந்தையின் பள்ளிக்கூடத்தில் நிர்வாகியாக உள்ளார்.
இவர் சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியான 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, இதுகுறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சிறுமியின் தாயார் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லிவியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *