June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் அருகே லாரி டிரைவர் வெட்டிக்கொலை

1 min read

Lorry driver hacked to death near Kadayanallur

12/6/2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் லாரி டிரைவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் தப்பி ஓடி விட்டனர்.

கடையநல்லூர் அருகே கரடி குளம் கிராமம் காலணி தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து லாரி டிரைவர் இவர் கரடி குளம் கிராமத்தில் உள்ள கருப்பன் கோவில் முன்னால் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து கரடிகுளம் பகுதிக்கு விரைந்து வந்த கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்டி, சப்-இன்ஸ்பெக்டர் சம்சுதீன், அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி டிரைவர் மாரிமுத்துவை வெட்டிக்கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர். என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *