சங்கரன்கோவிலில் பாஜக மாவட்ட தலைவருக்கு கருப்பு கொடி காட்டிய பாஜகவினர்
1 min read
BJP workers show black flags to BJP district president in Sankarankovil
18/9/2025
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த தென்காசி மாவட்ட பாஜக தலைவரை மாற்ற கோரி பாஜக-வினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமியை மாற்றக் கோரி பாஜகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி மாவட்ட தலைவரை வழிமறித்து நின்றனர்.
அதனால் மாவட்ட தலைவர் ஆதரவாளர்களுக்கும், கருப்புகொடி காட்டிய பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி கருப்புக் கொடி காட்டிய பாஜக பிரமுகர் அந்தோணி கூறியதாவது:-
தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி ஒரு தலை பட்சமாக செயல்பட்டு உட்கட்சிக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதாகவும், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்கள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதாகவும், நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்து வரும் தொண்டர்களை அவர் மதிப்பது கிடையாது. எனவே அவரை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி கருப்பு கொடி காட்டினார்கள்.
இதுகுறித்து ஆனந்தன் அய்யாச்சாமி கூறியதாவது:-
கருப்பு கொடி காட்டியவர்கள் அண்ணன் தம்பிகள் தான் என்ன செய்வதென்று தெரியாமல் செய்கிறார்கள், பாஜகவில் சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கலாம் மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் விளக்கம் அளித்தார்.
சங்கரன்கோவிலில் பாஜக மாவட்ட தலைவரை மாற்ற கோரி அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜவினரால் தள்ளு முள்ளு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.