June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பீகாரில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000

1 min read

Rs. 1000 per month for unemployed youth in Bihar

18.9.2025
பீகாரில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசார வேலைகளை ஆரம்பித்து விட்டன. பிரதமர் மோடி கடந்த 5 மாதத்தில் 5 முறை பீகாருக்கு சென்று பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக கூட்டணி களம் காண்கிறது. ஏற்கனவே அங்கு அந்தக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால், மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பதில் நிதீஷ் குமார் திட்டமிட்டு வருகிறார். இதே போல லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியைப் பிடிக்க காய் நகர்த்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில், வாக்காளர்களை கவரும் விதத்தில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடந்த சில மாதங்களாகவே சில முக்கிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார். முதலில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை 400 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாக அதிகரிப்பதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கும் மாணவர் கடன் அட்டை திட்​டத்​தின் கீழ் கல்விக் கடன்​கள் அனைத்​துக்​கும் வட்டி தள்​ளு​படி செய்​யப்​படும். மாணவர்​கள் கல்வி கடனை திருப்​பிச் செலுத்​து​வதற்​கான கால​மும் அதி​கரிக்​கப்​படும். அதன்​படி, ரூ.2 லட்​சம் வரை கல்வி கடன் பெற்ற மாணவர்​கள் அதனை திருப்​பிச் செலுத்​துவதற்​கான காலம் இப்​போது ஐந்து ஆண்​டு​களாக இருக்​கும் நிலை​யில் அது ஏழு ஆண்​டு​களாக (84 மாத தவணை​கள்) நீட்​டிக்​கப்​படும் என்று அறிவித்தார்.

இந்தநிலையில் நிதிஷ் குமார் எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:, பீகாரில் வேலை வாய்ப்பற்ற 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு 2 ஆண்டுகள் வரை மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அதில் அறிவித்துள்ளார். இது பீகார் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *