பாபநாசம் கல்லூரி மாணவிகளுக்கு எஸ்.எஸ்.ஆர்கானிக் கார்டனில் பயிற்சி
1 min read
Training for Papanasam College students at S.S. Organic Garden
18.9.2025
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி கணிதவியல் முதுநிலை மாணவிகளுக்கு பூலாங்குடியிருப்பு எஸ் எஸ் ஆர்கானிக் கார்டனில் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம்திருவள்ளுவர் கல்லூரியில் கணிதவியல் முதுநிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு செங்கோட்டை அருகே உள்ள பூலான் குடியிருப்பில் அமைந்துள்ள எஸ். எஸ் ஆர்கானிக் ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையில் வைத்துபயிற்சி நடத்தப்பட்டது.
இந்த பயிற்சிக்கு திருவள்ளுவர் கல்லூரியின் கணிதவியல்உதவி பேராசிரியரும் தலைவருமான இசக்கியம்மாள் தலைமை தாங்கினார். கல்லூரி உதவி பேராசிரியர்கள் பிரம்மாச்சி, பரம கல்யாணி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்த பயிற்சியை பணி நிறைவு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் எஸ். எஸ். கார்டனின் நிர்வாக இயக்குனர் ஷேக் முஹைதீன் பயிற்சியை நடத்தினார்.பணி நிறைவு பெற்ற துணை வேளாண்மை அலுவலர் எஸ்
ஷேக்முகைதீன் மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம், அங்கக வேளாண்மை மற்றும் மாணவப் பருவத்திலேயே வேளாண் சார்புடைய தொழில்களை இல்லத்தில் வைத்து நடத்தி சம்பாதித்தல், மூலிகை பூங்கொத்துகள் செய்தல் உள்ளிட்ட தொழில் முனைவோர் பயிற்சியை வழங்கியதோடு, பயிர்களை தாக்கும் நோய் பூச்சி பற்றிய விளக்கங்களை விளக்கி கூறி செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மூலிகை தேநீரும் பயறு வகை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள் வயல்வெளியில் விதை விதைத்தல் வெங்காயத்திற்கு இயற்கை பூச்சி விரட்டி மருந்துகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்ப செயல் விளக்கங்களை செய்து பழகினர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு முன் தேர்வு மற்றும் பின் தேர்வு நடத்தப்பட்டது.இறுதியாக கலந்து கொண்ட மாணவிகள் அனைவரும் தங்களுடைய பயிற்சி பற்றிய கருத்துரையை வழங்கினர். முடிவில் மாணவி சாந்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பண்ணை பணியாளர் பலவேசம் செய்திருந்தார்.