August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் அஞ்சலகத்தில் பார்வையற்றவர்களுக்கு சிறப்பு வசதிகள்

1 min read

Special facilities for the visually impaired at Sankarankovil Post Office

18.9.2025
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தலைமை அஞ்சலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன் தரும் ‘சைனேஜ் போர்டு’ மற்றும் தொட்டு உணரக்கூடிய தரைவசதி ஏற்பாடு செய்யப்படுள்ளது.

சங்கரன்கோவில் தலைமை அஞ்சலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ‘ப்ரைய்லி சைனேஜ் போர்டு’ மற்றும் ‘தொட்டு உணரக்கூடிய தரை’ உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பார்வையற்ற மாற்றுதிறனாளி கள் முக்கிய அலுவலக சேவை களைப் பெற மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக அஞ்சலகங்களுக்கு சென்றால், தங்களுக்கான சேவையை பெற எந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள உள்ள சிரமத்தை தவிர்க்கும் வண்ணம் சங்கரன்கோவில் தலைமை அஞ்சலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தொட்டு உணரக்கூடிய தரைப்பாதை மற்றும் சைனேஜ் போர்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் திரு செ சுரேஷ் குமார் கூறுகையில் சைனேஜ் போர்டில் சேவை தொடர்பான விவரங்களுக்கு அணுக வேண்டிய தொலைபேசி எண் திரையில் ‘ப்ரைய்லி’ எழுத்து வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது.

அது போல அஞ்சலகத்திற்கு வருகை தரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் எளிதில் சேவை வழங்கப்படும் இடத்தை அணுகும் வகையில் சிறப்பு டைல்ஸ்கள் 63 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அஞ்சலக சேவையை சிரமமின்றி பெற ஏற்படுத்தப் பட்டுள்ள இந்த வசதியைப் பற்றி அவர்களுக்கு தெரிவித்திடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *