June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

நாகையில் விஜய் பரப்புரைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்

1 min read

Conditions imposed on Vijay’s campaign in Nagaland

19.9.2025
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். நாகையில் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது .அதன்படி,

  • மதியம் 12:25 முதல் 1 மணிக்குள் நிகழ்ச்சியை முடித்திட வேண்டும்.

*அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது; அப்படி ஏற்படுத்தினால் அதற்கு கட்சியினரே பொறுப்பேற்க வேண்டும்.

*புத்தூர் அண்ணா சிலை பகுதியில் ரெயில்வே கேட் இருப்பதால் ரெயில் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

*உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலையிலும் மற்ற சாலைகளிலும் இரு புறங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது

*விஜய் செல்லும் பரப்புரை வாகனத்தின் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. அந்த வாகனத்தின் முன்பாகவோ பின்பாகவோ இரு சக்கர வாகனம், காரோ செல்லக்கூடாது.

  • அண்ணா, பெரியார் சிலை தடுப்புகள் மீது ஏறி இடையூறு செய்யக்கூடாது.
    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில் பரப்புரை நடைபெறும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
  • மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவரின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.
  • நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான இடம் மற்றும் நேரம் ஆகியவை பின்வருமாறு:
  • நாகப்பட்டினம் மாவட்டம்:
  • இடம்: புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு,
  • நேரம்: காலை 11 மணி
  • திருவாரூர் மாவட்டம்:
  • இடம்: நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதி
  • நேரம்: மாலை 3 மணி
  • வெற்றித் தலைவரின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றித் தலைவருடன் அணிவகுத்து, வென்று காட்டுவோம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *