June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் வில்லிசை கலைஞருக்கு கலைமாமணி விருது

1 min read

Kalaimamani Award for Keelappavur Villisai Artist

26/9/2025

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் அருகே உள்ள
மேலபட்டமுடையார்புரம் வில்லிசை கலைஞர் ஜெகநாதன் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் வட்டாரம், மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்த வில்லிசை கலைஞரான ஜெகநாதன் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 38 வருடங்களாக வில்லுப்பாட்டு படித்து வரும் இவர் கீழப்பாவூர் வட்டார கிராமிய வில்லிசை கலைஞர்களின் முன்னேற்ற சங்க தலைவராக உள்ளார். இவரது கலையை பாராட்டி ஏற்கனவே மாவட்ட அளவில் கலை சுடர்மணி விருது வழங்கப்பட்டுள்ளது.

கலைமாமணி விருதுக்க தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெகநாதனுக்கு வில்லிசை கலைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *