தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
1 min read
Farmers’ Grievance Redressal Day meeting in Tenkasi
2/9/2025
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தென்காசி மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஒத்திசைவு சாகுபடி செய்யப்பட்ட நெல் -8834 ஹெக்டர், சிறுதானியங்கள் – 4365 ஹெக்டர், பயறு வகைகள் – 530 ஹெக்டேர் பருத்தி 592, கரும்பு 662 ஹெக்டர், எண்ணெய் வித்து ஹெக்டேர், பழங்கள் 9716 ஹெக்டேர், காய்கறிகள் ஹெக்டேர், வாசனைப் பயிர்கள் -497 ஹெக்டேர், மலைப் பயிர்கள்-13794 ஹெக்டேர், பூக்கள் 461 ஹெக்டேர் பரப்பும் ஒத்திசைவு செய்யப்பட்டது. மழையளவு, நீர் இருப்பு விபரம் மற்றும் இடுபொருட்கள் இருப்பு விபரம் அனைத்து விவசாயிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 27.09.2025 அன்று காலை 10:30 மணியளவில் நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வைத்து நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழாவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதால் விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் வணிகத் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கடையநல்லுார் வட்டார வேளாண்மை துறையின் மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ. 48,000/- மதிப்பில் பவர் வீடர் மானியத்திலும், கீழப்பாவூர் வட்டார வேளாண்மை துறையின் மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ. 90,000/- மதிப்பில் பவர் டில்லர் மானியமாகவும், கீழப்பாவூர் வட்டார தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு குறைந்த செலவில் வெங்காய சேமிப்பு குடோன் கட்டுவதற்கு ரூ.1,00,000/- மானியமாகவும், வாசுதேவநல்லுார் வட்டார தோட்டக்கலைத்துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கல் துணை இயக்கம் திட்டத்தின் கீழ் பவர் டில்லர் 5. 1,06,402/-மானியமாகவும் தென்காசி வட்டார தோட்டக்கலைத்துறை மூலம் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காய்கறி பரப்பு விரிவாக்கத்திற்காக ரூ.7500/-மானியமாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு டிரோன் மூலம் மருந்து மற்றும் உரங்கள் தெளிப்பது குறித்து இந்திய உரக்கூட்ட நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 174 மனுக்களுக்கு 10 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் செ.அமலா, வேளாண்மை துணை இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ச.கனகம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா. தண்டபாணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கு.நரசிம்மன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஜெசிமா பானு மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், அனைத்து துறை அலுவலர்கள், அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.