நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட திமுக மாற்றியமைப்பு
1 min read
Nellai District DMK Reorganization for Administrative Convenience
26.9.2025
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் திமுக தேர்தல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அவ்வப்போது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களை நடத்தி தேர்தல் தொடர்பான பணிகள் மூடுக்கி விடப்படுகிறது.
அதேபோல மக்கள் பிரச்சினைகள், மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு எதிராக கொண்டு வந்திருக்கக்கூடிய திட்டங்களுக்கு சட்டரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற பெயரில் `ஒன் டூ ஒன்’ என்ற நிகழ்ச்சி மூலம் சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் தொகுதிகள் அடங்கியவை நெல்லை மேற்கு மாவட்டமாகவும், நாங்குநேரி, இராதாபுரம் தொகுதிகள் அடங்கியவை நெல்லை கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். அதைபோல நெல்லை கிழக்கு மாவட்டபொறுப்பாளராக கிரகாம்பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.