June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

முத்துமாலைபரத்தில் ஆதித்தனார் பிறந்தநாள் விழா

1 min read

Adithanar’s birthday celebration at Muthumalaiparam

27.8.2025
தென்காசி அருகே முத்துமாலைபுரத்தில் உள்ள ஆதிநாராயணன்- சந்திரலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பகத்தில் நடைபெற்ற தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121 வது பிறந்த தின விழாவில், அவரது உருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள் மலர் மாலை தூவி மரியாதை செலுத்தினர்.

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில் உள்ள அவர்களது குடும்ப வீட்டில் ஒரு பகுதியில் கிராமப்புற மாணவ, மாணவிகள் படிப்பதற்காக ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 101 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு இன்று காலை தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கீழ்கண்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது
தினத்தந்தியை உருவாக்கிய சி.பா.ஆதித்தனாரை போற்றுவோம்.
பாமர மக்களையும் நாளிதழ் படிக்க வைத்த ஆதித்தனாரை வணங்குவோம்.
வட மாநிலத்தவரையும் தமிழ் படிக்க வைத்த தமிழர் தந்தையை போற்றுவோம்.
சட்டசபையில் திருக்குறளை படிக்க வைத்த சபாநாயகரை போற்றுவோம்.
காகித ஆலை தொடங்கி மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்த உத்தமர் வாழ்க.
சிவந்தி ஆதித்தனாரை தமிழ் மண்ணுக்கு தந்த பெரியவரை போற்றுவோம்
இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *