கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருக்கம்
1 min read
News coming from Karur is worrying: Chief Minister M.K. Stalin
27.9.2025
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்
சுப்ரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியரையும் தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே முதல் அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று அவர் கரூர் விரைகிறார்.
.