விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ராகுல் காந்தி
1 min read
Rahul Gandhi spoke to Vijay over the phone.
29/9/2025
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சனிக்கிழமையன்று உடனடியாக சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பிய விஜய், அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கிட்டத்தட்ட 34 மணி நேரத்திற்கு பிறகே இன்று காலை விஜய் தனது வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார். பலத்த பாதுகாப்புடன் விஜய் தனது காரில் புறப்பட்டுள்ளார். அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை.
இதற்கிடையே, தவெக தலைவர் விஜயை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து விஜயிடம் கேட்டறிந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.