June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் சாரம் சரிந்து 9 பேர் பலி

1 min read

9 killed in shaft collapse at Ennore Thermal Power Plant

30/9/2025
சென்னை எண்ணூரில் உள்ள அனல்மின் நிலையத்தின் 4வது அலகில் முகப்பு பகுதியில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சாரம் சரிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் பலர் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *