ஆலங்குளம் அஞ்சலகத்தில் தபால் புக்கிங், ஆதார் சேவைக்கான நேரம் நீட்டிப்பு
1 min read
Post booking and Aadhaar service hours extended at Alankulam Post Office
2.10.2025
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் துணை அஞ்சலகத்தில் தபால் புக்கிங் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகளுக்கான நேரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் துணை அஞ்சலகத்தில் தற்போது காலை 08.30 மணி முதல் மதியம் 2 மணிவரை தபால் புக்கிங் சேவை வழங்கப்படுகிறது.
ஆலங்குளம் பகுதியில் வியாபாரிகள், வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் அதிகளவு உள்ளனர். அவர்கள் வேலை மற்றும் பள்ளிக்கு செல்லும் நேரங்களில் அஞ்சலகத்தை அணுகுவதில் உள்ள இடர்பாடுகளை தவிர்த்து எளிதாக அஞ்சலக சேவைகளை பெற வரும் 03.10.2025 முதல் ஆலங்குளம் துணை அஞ்சலகத்தில் அனைத்து தபால் புக்கிங் சேவை மற்றும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை காலை 08.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடைபெறும் எனவும் பொது மக்கள், வியாபாரிகள், வேலைக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்த நீட்டிக்கப்பட்ட அஞ்சல் சேவையை பெற்று பயனடையுமாறும் கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.