ஆலங்குளம் எம்எல்ஏ டிரைவரை தாக்கிய 4 பேர் கைது
1 min read
4 people arrested for attacking Alankulam MLA’s driver
3.10.2025
ஆலங்குளம் தாலுகா வெங்கடாம்பட்டி ஊராட்சி அழகம்மாள்புரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டிநாடார் மகன் முருகன் (வயது 48).இவர் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மனோஜ் பாண்டியனிடம் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த இசக்கி என்பவருக்கும் நிலப்பிரச்சினை காரணமாகமுன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 28ந் தேதி மதியம் முருகன் தனது மனைவி மாரியம்மாள் (வயது40) மகன்.பிரவின் (வயது 16), மகள் சுபாஷினி (வயது 14), தாய்
ஆவுடையம்மாள் (வயது68) ஆகியோருடன் வீட்டில் இருந்த போது பக்கத்து வீட்டு ஆடுகள் முருகன் வீட்டுக்கு முன்பு இருந்த செடிகளை மேய்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் முருகன் தட்டிகேட்டுள்ளார். உடனே பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் இசக்கி (வயது 63), அவரது சகோதரர்கள் சங்கரலிங்கம் (வயது43), செல்வகுமார் (வயது 40), மற்றும் இசக்கி மகன் மகாராஜா (வயது 34) ஆகியோர் முருகனின் வீட்டிற்கு வந்து முருகன் அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த முருகனின் தாய் மற்றும் மகனையும் தாக்கியுள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்ததும் நான்கு பேரும் ஓடி தலைமறைவாகினர்.
இதில் படுகாயமடைந்த முருகன் அவரது குடும்பத்தினர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். முருகன் அவரது மனைவி மாரியம்மாள் மேல் சிகிச்சைக் காக பாளை. மருத்துவமனை. யில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கி, சங்கரலிங்கம், செல்வகுமார், மகாராஜா ஆகிய நான்கு பேரையும்
கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.