August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: அனுமதியற்ற துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க கெடு

1 min read

Tenkasi: Unlicensed firearms must be surrendered immediately

5/10/2025
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வேட்டையாடும் நபர்கள் தங்கள் வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை தாமாக முன்வந்து அரசிடம் ஒப்படைக்க நவம்பர் 30 ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று தென்காசி
மாவட்ட வன அலுவலர் ரா.ராஜ்மோகன், தெரிவித்துள்ளார்‌

இதுகுறித்து தென்காசி மாவட்ட வன அலுவலர் ரா.ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் அனுமதி இல்லாத துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தாமாக முன் வந்து துப்பாக்கியை ஒப்படைக்க நவம்பர் 30 தேதி வரை கால கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி வனம் மற்றும் வனவிலங்குகள் நிறைந்து காணப்படுகிறது. இயற்கை அளித்துள்ள வனவளங் களையும், வனவிலங்குகளையும் காப்பது அரசியல் சாசனத்தின் படி அடிப்படை கடமையாகும். எனவே, வனவிலங்குகள் வேட்டையாடுதலை தடுக்கும்பொருட்டு அனுமதி இல்லாத துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் மற்றம் வனவிலங்கு வேட்டையில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் புலனாய்வு பணி நடைபெற்றுவருகிறது.
மேற்படி நடவடிக்கையின் ஒரு வாய்ப்பாக அனுமதி இல்லாத துப்பாக்கிவைத்திருக்கும் நபர்கள் தாமாக முன் வந்து துப்பாக்கியை ஒப்படைக்க நவம்பர் 30 தேதி வரை கால கெடு நிர்ணயித்துள்ளது.
மேற்படி கால கெடுவுக்குள் தென்காசி மாவட்டத்தில் தங்கள் அருகிலுள்ள வனச்சரக அலுவலர்களிடம் சட்ட நடவடிக்கை எதுமின்றி துப்பாக்கி ஒப்படைப்பு செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வாய்ப்பில் அனுமதி பெற்ற துப்பாக்கியையும் அரசிடம் திரும்ப ஒப்படைக்க விரும்பும் நபர்கள் ஒப்படைக்கலாம். மேலும், வன உயிரின பதப்படுத்தபட்ட பொருட்கள். கொம்புகள், நகங்கள், பல், தோல் மற்றும் வனவிலங்கு தொடர்பான அனைத்து பொருட்களையும் தானாக முன் வந்து ஒப்படைக்கும் பட்சத்தில் வழக்குகள் ஏதுமின்றி எற்றுக்கொள்ளப்படும். மேற்படி வாய்ப்பினை தகுதியுள்ள நபர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு. [email protected] என்ற இணையதள முகவரியிலும். மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்-04633233550, சிவகிரி- 04636298523, புளியங்குடி-04636235853, கடையநல்லூர் -04633210700, குற்றாலம்-04633298190, தென்காசி 04633233660. ஆலங்குளம் 04633293855 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறுதென்காசி மாவட்ட வன அலுவலர் ரா.ராஜ்மோகன், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *