June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் முதல்அமைச்சர் நிகழ்ச்சிக்கு இடம் தேர்வு

1 min read

Venue selected for Chief Minister’s event in Tenkasi

6.10.2025
தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் வருகை தரவுள்ள நிலையில் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான இடத்தை நேற்று அமைச்சர் கே கே எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்தி ரன் கலெக்டர் எஸ்பி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் பவ்வேறு நலத்திட்ட உதவிகளை வழங் குவதற்காகவும், நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க வும், இம்மாதம் தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தேர்வு செய்வதற்காக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வருகை தந்தார். அவர் இலத்தூர் விலக்கு ஆய்க்குடி சாலையில் சந்திக்கும் பகுதியில் பெட் ரோல் பங்க் அருகேயுள்ள ஜாஸ் நகர் மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டனர்.

. இதுகுறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

தென்காசிமாவட்டத்திற்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கவும், தென்காசி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இம்மாதம் வருகை தரவிருக்கிறார்.அந்த நிகழ்ச்சி நடை பெறுவதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். முதல்வர் வருகை தரும் தேதி விரைவில் அறிவிக்கப் படும்’ என்றார்.

இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செ. அரவிந்த் , தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார்,
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம்எல்ஏ. முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் மா.செல்லத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச் சந்திரன், கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரம ணியன், திமுக தென்காசி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் கலை கதிரவன், மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்டதுணை செயலாளர்கள் வழக்கறிஞர், கனிமொழி, கென்னடி மாவட்ட பொருளாளர் ஷெரிப், மாநில விவசாய அணி இணை செயலாளர் அப்துல்காதர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இலத்தூர் பூ.ஆறுமுகச்சாமி, வடகரை ஷேக்தாவது, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பி வர்கள் செங்கோட்டை எஸ்.எம்.ரஹீம், சீவநல்லூர் கோ.சாமித்துரை, தமிழ்செல்வி, ராஜேஷ்வரன், கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் மேற்ஹபுர் ரஹ்மான், தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர் சாதிர், தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, ஒன்றிய செயலாளர்கள் ஆ.ரவிசங்கர் ஆர்.எம்.அழகுசுந்தரம், வல்லம் எம்.திவான்ஒலி, சுரேஷ். மணிகண்டன், க.சீனித்துரை, எம்பிஎம்.அன்பழகன். பொன்செல்வன். ரமேஷ், சேக்முகமது, வழக்கறிஞர் சிவக்குமார், ஜெயா, நகர செயலாளர்கள் செங்கோட்டை வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன். அப்பாஸ், கணேசன். பிரப்பா, பேரூர் செய லாளர்கள் மேலகரம் இ.சுடலை, இலஞ்சி முத்தையா, குற்றாலம் குட்டி, புதூர் கோபால், அச்சன்புதூர் வெள்ளத்துரை. ஆய்க்குடி சிதம்பரம், பண்பொழி , அ.ராஜராஜன், சுந்தரபாண்டியபுரம் வே. பண்டாரம், வடகரை தங்கப்பா, மாவட்ட அணி அமைப் பாளர்கள் இளைஞரணி குற்றாலம் டி.ஆர்.கிருஷ்ணராஜா, வழக்கறிஞர் அணி தங்கராஜபாண்டியன், தொண்டரணி இசக்கி பாண்டியன், விவசாய தொழிலாளர் அணி வே.கோமதிநாயகம், சிறுபான்மை பிரிவு அணி இஞ்சி இஸ்மாயில் அழகுதமிழ், முத்துராமலிங்கம். பரமசிவன், செல்வக்குமார், அண்ணா மலை, வளன் அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *