June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு

1 min read

Case filed seeking ban on gas tanker truck strike

11.10.2025
சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. அவசர பொதுக்குழு இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 5,500 லாரிகள் மூலமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு கியாஸ் விநியோகம் செய்து வருகிறது.

இந்த சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. அந்த கூட்டத்தில். 2025-2030-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தில் எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 3,500 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 2,800 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளன.போராட முடிவு மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து, சுங்க கட்டணங்கள் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவை தொகைகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த வேலை நிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என்றும் இந்த போராட்டாத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் அனுப் குமார் சமந்த்ராய் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *