தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
1 min read
Awareness program on fire and rescue operations
12.10.2025
தமிழ்நாடு தீயணைப்பு துறையின் சார்பாக வாருங்கள் படிக்கலாம் என்ற தலைப்பில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு நேரில் சென்று தீயணைப்பு துறை சார்ந்த மற்றும் மீட்பு பணிகள் குறித்தும் தீ விபத்து குறித்தும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதத்தில் தென்காசி நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தென்காசி நகர் மன்றத் தலைவர் ஆர்.சாதிர் கலந்து கொண்டார். மேலும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுகாதார மேற்பார்வை யாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
தென்காசி மாவட்ட அலுவலர் மணிகண்டன் தலைமையில் தென்காசி நிலைய பணியாளர்கள் தீயணைப்பு துறை சிறப்பு உபகரணங்கள் கண்காட்சி படுத்தப்பட்டது நிகழ்ச்சியை சிறப்பு நிலைய அலுவலர் கணேசன் தொகுத்து வழங்கினார் . இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
பொதுமக்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சிறப்பு நிலைய அலுவலர் சு.கணேசன், அனைவருக்கும் நன்றி கூறினார்.