June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

கோவிந்தப்பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

1 min read

Gram Sabha meeting in Govindaperi Panchayat

12.10.2025
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப் பேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் டி கே பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கோவிந்தப்பேரி ஊராட்சி கிராம சபை கூட்டம் ராஜாங்கபுரம் இ சேவை மையத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு கோவிந்தப் பேரி ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் இசேந்திரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் மாரித்துரை அனைவரையும் வரவேற்று பேசினார்.காலை 10 மணிக்கு கூட்டம் துவங்கிய நிலையில் 10.45 மணி அளவில் தமிழக முதல்வர் காணொளி மூலம் அரை மணி நேரம் பேசினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு காணொளி காட்சியையும் முதலமைச்சரின் பேச்சையும் கேட்டு விவரங்களை புரிந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பற்றாளராக கடையம் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சைலேஷ் கலந்து கொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் கோவிந்தப் பேரி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.இசக்கிப் பாண்டி, பி.இளவரசி, எம். பொன்னுத்தாய், வி.சுகிர்தா, வி.நாகராஜன்,கோவிந்தபேரி ஊராட்சி கணினி இயக்குனர் பேபி அனு, சிவா, மகளிர் சுய உதவிக் குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணித்தள பொறுப்பாளர்கள்,
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம், காமராஜர் நகர், பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் மாரித்துரை அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *