June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தியாகி இமானுவேல் சேகரனாரின் பேத்தி உள்பட 2 பெண்கள் உடல் உறுப்புகள் தானம்

1 min read

2 women, including martyr Emanuel Sekaran’s granddaughter, donate organs

15.10.2025

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள செல்லூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மனைவி தனசுந்தரி(வயது 39). இவர் தியாகி இமானுவேல் சேகரனாரின் மகள் வழி பேத்தி ஆவார்.பள்ளிப் பருவக் காலம் முதலே  உடல் உறுப்புகள் தானம் செய்வதன் அவசியத்தை உணர்ந்தவர்.மேலும் பரமக்குடி

எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கண்ணன் என்பவர் மனைவி 

தவதீஸ்வரி(வயது 45) என்பவரும்

பரமக்குடி மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேசன் எனும் தொண்டு நிறுவனத்தின் தலைவர் முத்துக்குமாரிடம் அவர்களது உடல் உறுப்புகள் தானம் செய்யும் விருப்பத்தை தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் உடல் உறுப்புகள் தான பதிவாளர் திலீப் குமார் தலைமையில் உடல் உறுப்புகள் தானம் செய்ய பதிவு செய்தனர். பின்பு அதற்கான அரசு பதிவு சான்றிதழ்களை பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ அலுவலர் மருத்துவர் முத்தரசனிடம் பெற்றுக் கொண்டனர்.அதுசமயம் தியாகி இமானுவேல் சேகரனார் பேரனும்,பரமக்குடி தேவேந்திர பண்பாட்டுக் கழக தலைவருமான பொறியாளர் சக்கரவர்த்தி, மெழுகுவர்த்திநண்பர்கள் பவுண்டேசன் தலைவர் முத்துக்குமார்  உடன் இருந்தார். 

உடல் உறுப்புகள் தானம் செய்த இரு பெண்களின் செயலை பரமக்குடி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

ReplyForwardAdd reaction

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *