June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூரில் கனமழைக்கு வீடு இடிந்தது-நிவாரண உதவி

1 min read

House collapsed due to heavy rain in Avudaiyanur – Relief assistance

22.10.2025

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள
ஆவுடையானூர் ஊராட்சி மாடியனூரில் கனமழையால் வீடு சேதமடைந்தவருக்கு உணவு பொருட்கள் மற்றும் நிவாரணத்தொகையினை திமுக சார்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்.

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி, மாடியனூர் ராஜபாளையம் தெருவை சேர்ந்த ராஜா மணி நாடார்- ராஜாத்தி அம்மாள் தம்பதியர் வசித்து வந்த வீடானது கன மழை காரணமாக இடிந்து சேதம் அடைந்தது.

இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் சென்று சேதமடைந்த வீட்டை பார்வையிட்டார். பின்னர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசி விரைவில் அரசு சார்பில் வழங்கக்கூடிய நிவாரணத் தொகையும். புதிய வீடு கட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து திமுக சார்பில், அரிசி,காய்கறி பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களும், நிவாரண உதவித்தொகையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் இட்லி செல்வன், கிளைச்செயலாளர் சரவணன், ஒன்றிய பிரதிநிதி ஜான் நியூட்டன், முன்னாள் செயலாளர் காமராஜ், பொடியனூர் சிவன் பாண்டியன், சிவசைலனூர் ரூபன், லக்ஸ் டைலர், பால்த்துரை, மாயாண்டி சுதர்சிங், ஆசிரியர் அந்தோணி, ராஜாங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *