தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை மேலப்பாவூர் கால்வாய் உடைப்பு- அமைச்சர் ஆய்வு
1 min read
Continuous rains in Tenkasi district cause Melappavur canal to break – Minister inspects
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் மேலப்பாவூர் பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டனர்
மேலப்பாவூரில் பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுமார் 50 ஏக்கர் அளவில் பயிரிடப் பட்டிருந்த விவசாய பயிர் கள் சேதமடைந்தது. கால் வாயை பார்வையிட்ட அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன், உடைப்பு பகுதியை கால் வாயை சீரமைக்க உத்தர விட்டார்.
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த சில ‘தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழை யால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிக ரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தென்காசி சிற்றாற்று பாசனம் மூலம் தண்ணீர் செல்லும் கால் வாயானது மேலப்பாவூர் வழியாக கீழப்பாவூர், “நாகல்குளம், சாலைப் புதூர், கடம்பன்குளம், பட்டமுடையார் குளம் மற்றும் ஆலங்குளம் பகுதிக ளில் உள்ள -குளங்களுக்கு குளங்களு தண்ணீர் செல்லும், தற் போது கால்வாயில் அதிக ளவு தண்ணீர் சென்றதால் மேலப்பாவூர் வழியாக மேலப்பாவூர், கீழப்பா வூர் குளங்களுக்கு செல் லும் கால்வாயில் உள்ள தடுப்பு சுவரில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழு வதும் அருகில் இருக்கும் விவசாய நிலங்களுக்குள் பாய்ந்தது. இதனால்விளை நிலத்தில் பவெங்காயம், நிலத்தில் பயிரிடப்பட்டி
மிளகாய், கேந்தி பூக்கள் உள்ளிட்டவை முழுவது மாக தண்ணீரில் மூழ்கின. கால்வாயில் உடைப்பு ஏற் பட்ட இடத்தில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க முடியாத அளவிற்கு தண் ணீர் அதிகரித்து செல்வ தால் விவசாயிகள் செய்வத றியாது திகைத்துள்ளனர். மேலும் இந்த கால்வாய் நீரில் சுமார் 50 ஏக்கர் அள வில் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேதமடைந்த கால் வாயை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்தி ரன், தென்காசி கலெக்டர் கமல் கிஷோர், தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார், திமுக தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துறை கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கால்வாய் சீரமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் அமைச்சரிடம் விவசாயிகள் தங்களின் நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.