August 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையம் பகுதியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு

1 min read

Collector inspects development works in Kadayam area

23.10.2025
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் தென் மாவட்டத்திற்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களுக்குத் தேவையான வளர்ச்சித்திட்டங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்க அறிவுறுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப்பணிகளையும்.கீழக்கடையம் ஊராட்சி பொன்மலை நகர் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள், வருகைப்பதிவேடு குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், நூலகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான சுகாதார வளாகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். நாற்றங்கால் பண்ணையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், மந்தியூர் ஊராட்சி, மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்சாலையினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது கடையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *