August 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்னையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த மாணவிகள் பயிற்சி

1 min read

Students trained to control rhinoceros beetles in coconuts

4.8.2026
தென்காசி மாவட்டம், தேன்பொத்தை கிராமத்தில்
கிராமப்புற தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டம் (RHWE)-இன் கீழ்,
கலசலிங்கம் பல்கலைக்கழக தோட்டக்கலைத் துறையில் பயிலும் இறுதியாண்டு மாணவிகளான ல. நந்தினி பிரியா, செ. சுபலட்சுமி, க. பொன்னுத்தாய் மற்றும் மு. மதுமிதா ஆகியோர், விவசாயிகளுக்கு தென்னையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறை துணை பேராசிரியர் முனைவர் சீ. விஜயகுமார் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் கா. செல்வராணி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மாணவிகள் விவசாயிகளுக்கு காண்டாமிருக வண்டுகளின் வாழ்க்கைச் சுழற்சி, தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கமளித்தனர். மேலும், பெரோமோன் பொறிகள் அமைத்தல், குருத்துப் பகுதியில் தாக்கும் வண்டுகளை இரும்புக் கம்பி மூலம் அகற்றுதல் மற்றும் இனப்பெருக்க இடங்களான மட்கிய எருக்குவியல், தொழு உரக் குவியல்களை அகற்றுதல் ஆகியவை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் நிறைவில், தென்னைத் தோட்டங்களில் காண்டாமிருக வண்டுகளின் தாக்குதலை தொடர்ந்து கண்காணித்து, ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை பின்பற்றுவதன் மூலம் சேதத்தை குறைத்து மகசூலை அதிகரிக்கலாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *