August 29, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் இடிப்பு

1 min read

Demolition of a shopping mall built without permission in Tenkasi

24.10.2025
தென்காசியில் நகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாக கட்டிடத்தை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி ஊழியர்கள் இடித்தனர்

தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில் இந்தியன் வங்கி சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கி கட்டிடத்தின் உரிமை யாளர் நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் வங்கியின் முகப்பு பார்க்கிங் பகுதியில் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளை கொண்ட கடைகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டி உள்ளார்.

ஆனால் இந்த கட்டிடங்களுக்கு முறையாக நகராட்சியில் அனுமதி பெறவில்லை என்று கூறி தனிநபர் ஒருவர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்து
உள்ளார்.

அதனைத் தொடர்ந்து அனுமதி பெறாமல் கட் டப்பட்ட முதல் மற்றும் இரண்டாவது மாடி வணிககடை கட்டிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்க துவங்கினர். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் முறையாக அனுமதி பெற வில்லை என்று கூறி இடிக் கப்பட்ட சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *