June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

சபரிமலை சீசன்: சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள்

1 min read

Sabarimala season: Special trains to run between Chennai and Kollam

2.11.2025
சபரிமலை சீசனில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க, பின்வரும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்:

சென்னை எழும்பூர்-கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்:06111) வருகிற நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை (வெள்ளிக்கிழமைகளில்) இரவு 11.55 மணிக்கு எழுபூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்,
மறுமார்க்கத்தில், கொல்லம் – சென்னை எழுப்பூர் செல்லும் வாராந்திர சிறபு ரெயில் (வண்டி எண்: 06112) வருகிற நவம்பர் 15 முதல் ஜனவரி 17 வரை (சனிக்கிழமைகளில்) மாலை 4.35 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12 மணிக்கு சென்னை எழுப்பூர் வந்து சேரும்.
சென்னை சென்ட்ரல் – கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06113) வருகிற நவம்பர் 16 முதல் ஜனவரி 18 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு சென்னை எழுப்பூர் வந்து சேரும்.
மறுமார்க்கத்தில், கொல்லம் – சென்னை சென்ட்ரல் செல்லும் வராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06114) வருகிற நவம்பர் 17 முதல் ஜனவரி 19 வரை (திங்கட்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
சென்னை சென்ட்ரல் – கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06117) வருகிற நவம்பர் 22 முதல் ஜனவரி 24 வரை (சனிக்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கொல்லம் – சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06118) வருகிற நவம்பர் 23 முதல் ஜனவரி 25 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
சென்னை சென்ட்ரல் – கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06127) வருகிற நவம்பர் 20 முதல் ஜனவரி 22 வரை (வியாழக்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கொல்லம் – சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06128) வருகிற நவம்பர் 21 முதல் ஜனவரி 23 வரை (வெள்ளிக்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (04.11.2025) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *