முருகேசனாரின் முத்தான “படைப்பு பெயர்மாறிய பெரியோர்”
1 min read
oplus_131106
Murugesanar’s pearl “Great Men Who Changed Their Names in Creation”
8.11.2025
மதுரை அருகே கல்லுப்பட்டியை பிறப்பிடமாக கொண்ட பி.முருகேசனார் அவர்கள் தினத்தந்தியில் பொறுப்பாசிரியாக பணியாற்றிவர். அவர் முதல் படைப்பாக “நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள்” என்ற மரபு கவிதை புத்தகத்தை வெளியிட்டார். இதில் இடம்பெற்ற அனைத்து பாக்களும் மிக எளிமை நடை… அதே நேரம் பல தத்துவங்களை கொண்டுள்ளன.
அடுத்து அவருடைய படைப்பு “மண்ணில் மறையா மாமனிதர்கள்”. இதில் பெருமைக்குரியவர்களின் வாழ்நாள் பயணத்தை விவரித்துள்ளார். அதில் அவர்களின் இறுதி கட்ட சம்பவங்கள் உணர்ச்சி மிகுந்து காணப்படுகிறது.
தற்போது மூன்றாவது புத்தகமாக “பெயர்மாறிய பெரியோர்(இட்ட பெயர்-இடாதபெயர்)” என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இதனை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இதில் இயற்பெயர் மாறி பட்டப்பெயரோடு பெருமைக்குரியவராய் வாழ்ந்தவர்கள் பற்றி விவரிக்கப்பட்டு உள்ளது. ஆன்மிகம், அரசியல், இலக்கியவாதிகள், கவிஞர்கள், சினிமா கலைஞர்கள் என அத்தனை பேரையும் கொண்டுவந்துள்ளார். இதன் மூலம் பலரும் அறிந்திராத பல ஆற்றோர்கள் வாழ்க்கை குறிப்பு இடம்பெற்றுள்ளது.
இறைவழிபாட்டுடன் எதையும் தொடங்கவேண்டும் என்பது மரபு. அதனால் மதுரையை முதல் அத்தியாயமாக எடுத்து கையாண்டுள்ளார். மதுரையின் பெயர் எப்படியெல்லாம் மாறியது. அங்கு அரசாளும் மீனாட்சி அம்மன்- சொக்கநாதர் பெயர்கள் எப்படியெல்லாம் பக்தர்களால் அழைக்கபட்டன என்று விளக்கியுள்ளார்.
சிலரின் இயற்பெயர் இதுவா என்றும் சிலருக்கு இத்தனை பட்டப்பெயர்களா என்றும் நம்மை வியக்க வைக்கிறது. இந்நூல் மாந்தர்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்வதோடு அவர்கள் வாழ்வில் இடம்பெற்ற சுவாரசியமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆக்கிவீரர் தியான்சந்த் அவர்கள் ஆக்கி மாயாவி என்று பட்டம் பெற்றதையும் குறிப்பிட்டுள்ளார். அவருடைய ஆட்டத்தை கண்டு வியந்த சர்வாதிகாரி ஹிட்லர் அவரை தன்நாட்டிற்கு அழைத்தார். அதற்கு இந்தியா விற்பனைக்கு அல்ல என்று துணிச்சலுடன் பதில் அளித்தார். இதுபோன்ற குறிப்புகள் பல இடம்பெற்றுள்ளன.
காந்தியவாதியான முருகேசனார் அவர்கள் எப்போதும் கதர்ஆடைதான் அணிவார். அதனால்தானோ என்னவோ இந்நூலில் மகாத்மா காந்திக்கு அதிக பக்கங்கள் ஒதுக்கியுள்ளார். சுமார் 35 பக்கங்கள் காந்தியின் புகழை பாடியுள்ளன. அடுத்து பெருந்தலைவர் காமராஜரை 25 பக்கங்கள் ஒதுக்கி பெருமை படுத்தியுள்ளார். பாரதியாரை பெருமைப்படுத்தும்போது கடையத்தில் சேவலாய அமைத்த செல்லம்மா-பாரதி சிலையை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். அதில் என்னுடைய பெயரையும் நன்றிக்காக குறிப்பட்டுள்ளார். அந்த நன்றியை பாரதியாரின் படம்கொடுத்து உதவிய கல்யாணிசிவகாமிநாதன் அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.
இந்த புத்தகம் ஒரு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. சாலமன் பாப்பையா அவர்களின் அணிந்துரையை படித்தாலே இதன் சிறப்பை உணரலாம்.
இந்த நூல் முழுவதையும் புத்தகத்தை தனித்தமிழில் எழுதியுள்ளார். பக்க எண்கள் தமிழிலும் இடம்பெற்றுள்ளன. இதனை படித்தால் ஆசிரியர் அவர்கள் இதற்காக எடுத்துக்கொண்டு பெருமுயற்சியை உணரலாம். இந்த அரிய புத்தகம் ஒவ்வொருவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கவேண்டிய பொக்கிஷம்.

அன்பன் கடையம் பாலன்.