வடகரை, வல்லம் பகுதிகளில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம்
1 min read
Stalin to provide health care in Vadakarai and Vallam areas Multipurpose medical camp
9.11.2025
தென்காசி மாவட்டம் வடகரை கீழ்ப்பிடாகை மற்றும் வல்லம் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” பன்நோக்கு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். கலந்து கொண்டு பார்வையிட்டார்.
அதன்பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், பேசியதாவது:-
பொது மக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் வடகரைகீழ்ப்பிடாகை வட்டாரம் வல்லம் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெறும் இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், குழந்தைகள் நலம், இருதயவியல், நரம்பியல், தோல்,, பல், கண், காது, மூக்கு, தொண்டை மனநலம், இயன்முறை, நுரையீரல் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் தகுதியுள்ளவர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம்.
இம்முகாமில், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் வி.கோவிந்தன். உதவி ஆணையர் அ.சி.கௌரி ஜெனிபர், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தராம்பாள். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகராஜன் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மாவட்ட திட்ட அலுவலர் முத்துமாரியப்பன் மற்றும் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள். அலுவலர்கள், பொதுமக்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.