தென்காசி அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
1 min read
College student commits suicide by hanging near Tenkasi
11.11.2025
தென்காசி அருகே சாம்பவர் வடகரையில் கல்லூரி (பி.டெக்) மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே சாம்பவர் வடகரையில் கல்லூரி (பி.டெக்) மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை 1-வது வார்டு அருமைநாயகம் தெருவை சேர்ந்த கொத்தனார் மாரியப்பன் மகன் மதன் (வயது-20) இன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலசலிங்கம் கல்லூரியில் பி டெக் அக்ரி முன்றாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் இன்று வீட்டில் தூக்கீட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சாம்பவர்வடகரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.