சிறப்பு வாக்காளர் படிவத்தில் ஊர் பெயர் தவறு: கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
1 min read
Village name wrong in special voter form: Villagers petition collector
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆரியங்காவூருக்கு பதில் துரைச்சாமியாபுரம் என சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த படிவத்தில் ஊர் பெயர் தவறாக அச்சடித்துள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், திப்பணம்பட்டி ஊராட்சி, ஆரியங்காவூரை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்;சியர் அலுவலத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், திப்பணம்பட்டி ஊராட்சி, 1வது வார்டு பகுதியான ஆரியங்காவூர் கிராமம் பிளாக் எண் 7ல் உள்ளது. கடந்த 2024 பாராளுமன்ற தேர்தல் வரையிலும் பூத் எண்: 162 ஆரியங்காவூர் 1வது வார்டு என்று வாக்காளர் பட்டியல் தெளிவாக இருந்தது. ஆனால் தற்போது வாக்காளர் சிறப்புத் திருத்தத்திற்கான அலுவலர்கள் வழங்கியுள்ள விண்ணப்பப்படிவங்கள் அனைத்திலும் ஆரியங்காவூர் என்பதற்கு பதிலாக துரைச்சாமியாபுரம் என்று தவறுதலாக உள்ளது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற கருத்து மோதல்கள். அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த தவறு நடைபெற்றதற்கு யார் காரணம். வருவாய் துறையா? உள்ளாட்சி துறையா? என்பதை போர்க்கால அடிப்படையில் ஆய்வுசெய்து, மீண்டும் வாக்காளர் பட்டியலில் பிளாக் எண் 7 ஆரியங்காவூர் 1வது வார்டு என்று திருத்தம் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.