June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரம்- ஆட்சித்தலைவர் தகவல்

1 min read

SIR work intensifies in Tenkasi district – Governor’s information

13/11/2025
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தென்காசி மாவட்டத்தில் 01012026ம் தேதியினைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வருகின்றனர். மேலும் 04122025 முடிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர் களிடமிருந்து பெற்று பதிவேற்றும் செய்யும் பணியினை மேற்கொள்ள உள்ளனர்.

சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தென்காசி மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வாக்காளர் பதிவு அலுவலர் வீதம் 5 வாக்காளர் பதிவு அலுவலர்களும், 5 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 15 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும், சிறப்பு தீவிர திருத்தப் பணியில் உள்ளனர். கணக்கீட்டு படிவங்களை வழங்கித் திரும்பப் பெறும் பணியில் மொத்தம் 1544 வாக்குச் சாவடிநிலை அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேற்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணியினைக் கண்காணிக்க 159 மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

மேலும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் மேற்பார்வையாளர்கள் பணியினைக் கண்காணித்திட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளர்கள், தென்காசி மாவட்டத்திற்குள் முன்னர் இருந்த வீடுகளிலிருந்து தற்போது முகவரி மாற்றம் செய்தவர்கள், தொழில் நிமித்தம் பிற மாவட்டங்களுக்கோ. பிற மாநிலங்களுக்கோ மற்றும் வெளிநாட்டிற்கோ இடம் பெயர்ந்துள்ள வாக்காளர்கள் தங்களது கணக்கீட்டுப் படிவங்களை பெற அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பெயர் மற்றும் தொலைபேசி விவரங்களை https://www.erolls.tn.gov.in/blo என்ற தளத்திலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அல்லது 04633-1960 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் ஆன்லைன் மூலமாகவும் https:/voters.ccigovin.login என்ற இணையதளத்தில் கணக்கீட்டுப் படிவங்களை விவரங்களைப் பூர்த்தி செய்யும் வசதியும் உள்ளது. ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யும் கணக்கீட்டுப் படிவங்களில் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு E-sign செய்வது அவசியம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் voters.ccigov.in என்ற இணைய தளத்திற்குள் சென்று Book a call with BLO என்ற வசதியைப் பயன்படுத்தியும் தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பிஎல்ஓ விடம் பெறலாம் என்றும் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *