தென்காசி மாவட்டத்தில் எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப உதவியாக வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்
1 min read
Special camp at polling stations to help fill SIR form in Tenkasi district
தென்காசி மாவட்டத்தில் தீவிர சிறப்புதிருத்தம் கணக்கீட்டு படிவங்களை நிரப்ப உதவியாக நாளையும், நாளை மறுதினமும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தென்காசி மாவட்டத்தில் நடை பெற்று வரும் தீவிர சிறப்பு திருத்தம் 2026 கணக்கீட்டு படிவங்களை நிரப்பி வழங்கிட உதவி செய்யும் விதமாக வருகிற சனி (நவ.15) மற்றும் ஞாயிறு (நவ.16) ஆகிய தினங்க ளில் அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் அமைந்துள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்க ளில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த உதவி மையங்களில் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வது குறித் தும், 2002 வாக்காளர் பட்டியல் விபரங்களை கண்டறிந்து வழங்கவும் உதவி செய்யப்படும். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதில் தென்காசி வீகே. புதுார் செங்கோட்டை கடையநல்லுார் ஆகிய வட்டங்களில் சனி. ஞாயிறு அன்று ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் 19 மையங்களுக்கு மட்டும் அந்தந்த வட்டாட்சியரால் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு அதில் உதவி மையங்கள் செயல் பட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.