தென்காசி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு
1 min read
Tenkasi District Public Relations Officer takes charge
தென்காசி மாவட்டத்தின் புதிய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக கருப்பண்ண ராஜவேல் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்வில் அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் உட்பட பல துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். கருப்பண்ண ராஜவேல் மக்கள் தொடர்புதுறையில் நீண்டகால சேவையை மேற்கொண்டவர். அரசு தகவல்கள், திட்டங்கள், சாதனைகள் மற்றும் பொதுநல நடவடிக்கைகளை மக்களிடம் நேரடியாகவும் திறம்படவும் கொண்டு சேர்க்கும் பணிகளில் அவர் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு அனுபவம் பெற்றுள்ளார்.
பதவியேற்பு விழாவிற்குபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மாவட்டத்தின் அரசு தகவல்கள் அனைத்தும் சரியான நேரத்தில் ஊடகங்களுக்கு அனுப்பப்படும், அரசு ஊடகம் மக்கள் இணைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.,மக்களுக்கான அரசு நலத்திட்டங்கள் தெளிவாக விளக்கப்படு வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.