தென்காசியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்
1 min read
Free bicycles for 11th grade students in Tenkasi
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில்
11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கியதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
தென்காசி இசி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் வழக்கறிஞர் ஈ.ராஜா , வாசுதேவநல்லூர் டாக்டர் தி.சதன் திருமலைக் குமார் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல்நிலைப் பள்ளிகளில் (2025-2026) 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நமது மாவட்டத்தை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 4,374 மாணவர்களும், 5.830 மாணவியர்களும் மொத்தம் 10,204 மாணவ மாணவியர்களும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1244 மாணவர்களும் 1606 மாணவியர்களும் மொத்தம் 2,850 மாணவ, மாணவியர்களும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 55 மாணவர்களும், 80 மாணவியர்களும் மொத்தம் 135 மாணவ, மாணவியர்களும் ஆக மொத்தம் 5,673 மாணவர்களும், 7,516 மாணவியர்களும் மொத்தம் 13:189 மாணவ, மாணவியர்களும் பயன்பெறுவார்கள், ஒரு மாணவர்களின் மிதிவண்டி ரூ.4900/- வீதம் 5,673 மாணவர்களுக்கு ரூ277,97,700 மதிப்பிலும், ஒரு மாணவியர்களின் மிதிவண்டி ரூ.4760 வீதம் 7516 மாணவியர்களுக்கு ரூ.3,57,76,160 மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.63573,860 மதிப்பீட்டில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா மற்றும் தென்காசி நகர்மன்ற உறுப்பினர் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.