June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

1 min read

What is the reason for the increase in egg purchase prices?

20.11.2025
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 605 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டம், அதன் தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், முட்டை கொள்முதல் விலை 610 காசுகளாக அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 4-வது முறையாக வரலாறு காணாத வகையில், புதிய உச்சம் தொட்டுள்ளது.

பண்டிகை காலங்கள், வட மாநிலங்களுக்கான தேவை அதிகரிப்பு, மற்றும் கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வே, இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடு என உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சில்லறை விற்பனை கடைகளில் முட்டை ஒன்றின் விலை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *