June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ரூ.25 லட்சம் கொடுத்த ஆசிரியைக்கு பாராட்டு

1 min read

Praise for teacher who donated Rs. 25 lakhs to implement Tenkasi Municipality drinking water project 21.11.2025
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி குடிநீர் தேவைக்காக குடிநீர் தொட்டி கட்டிட ரூ.25 லட்சம் மதிப்பிலான தனக்கு சொந்தமான இடத்தினை தென்காசி ஓய்வு பெற்ற ஆசிரியை, தென்காசி நகராட்சி தலைவர் ஆர்.சாதிரின் தாயார் ஆ. ரபீக்காள் நகராட்சிக்கு தானமாக எழுதி கொடுத்தார்.
தென்காசி நகராட்சி மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், ரூ. 69.45 கோடியில் தாமிரபரணி குடிநீர் திட்டம் -அலகு 2 திட்டத்தினை தமிழக முத ல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் அடி க்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இத்திட் டத்திற்காக 5 இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்படவுள்ளது. இதில் 3 தொட்டிகள் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படவுள்ளது. மேலும் 2 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் தென்காசி நகரா ட்சி முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும், ஓய்வு பெற்ற ஆசிரியரும், தற்போதைய நக ர்மன்ற தலைவர் ஆர். சாதிரின் தாயாருமான ஆ.ரபீக்காள் தனக்கு சொந்தமான இடத்தினை நகராட்சிக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளார்.
தென்காசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர் மன்ற தலை வர் சாதிர் முன்னிலையில் கடையம் சரகம் பொட்டல்புதூர் கிராமத்திலுள்ள தனக்கு பாத்தியப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான 6 செண்ட நிலத்தினை தென்காசி நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக தானமாக தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் எழுதி கொடுத்து பத்திரத்தை ஒப்படைத்தார். தென்காசி நகராட்சி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தனக்கு சொந்தமான நிலத்தை தானமாக கொடுத்த தென்காசி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆ.ரபீக்காள் – க்கு அனைத்து தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் முகம் மது இஸ்மாயில், நகர் மன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், நிர்வாகிகள் அவைத்தலைவர் பாலகிரு ஷ்ணன் (எ) கிட்டு, துணை செயலாளர்கள் ராம்துரை, பால்ராஜ், பொருளாளர்
அ.சேக்பரீத், தென்காசி மாவட்ட திமுக பொறியாளர் பொறியாளர் அணி தலைவர் கீழப்புலியூர் சே.தங்கப் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் ரஹீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *